All Quotes By Tag: Bharathi
“நின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்என்னை கவலைகள் தின்ன தகாதென..நின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கினதன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்குநின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்நின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்நின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்துன்பம் இனி இல்லை, சோர்வில்லைசோர்வில்லை, தோற்பில்லைநல்லது தீயது நாமறியோம்நாமறியோம் நாமறியோம்அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திடநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுகநின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்”
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேதுச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”
-